top of page

இளங்கோ அடிகளின் புதுமை - அதுவே அவர் புகழ் நிலைக்க காரணம். Out of Box thinking by "Ilangoadigal"



Picture Credit : David ( Evilboy Pintrest )



நமது தமிழ் மொழியின் ஐம்பெரும் காப்பியங்களில் " சிலப்பதிகாரம் " குடிமக்கள் காப்பியம் என்கின்ற பெருமையை பெற்றிருக்கிறது ஏனெனில் அது அன்றைய ( சில இன்றும் பொருந்தும் ) மக்களின் வாழ்வை சார்ந்து இயற்றப்பட்டது.


சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் “இளங்கோ அடிகள்” . அவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி எனவும் , அண்ணனுக்காக பதவியை விட்டுக் கொடுத்துவிட்டு சமண மதத் துறவியாக மாறி விட்டார் எனவும் அவரை பற்றிய வரலாற்று குறிப்புகள் கூறுகிறது.


இதனால்தான் அவர் இத்தகைய புகழை அடைந்து இருக்கிறாரா என்றால் , இல்லை அவர் இன்றளவும் புகழ் அடைய காரணம் அவர் செய்த ஒரு புதுமை தான்.


என்ன புதுமை ? என்றால் அவர் சமண சமயத்தைச் சார்ந்து இருந்தாலும் வைணவக் கடவுளான திருமால் மற்றும் கொற்றவை போன்ற பிற மத தெய்வங்களை போற்றிப் பாடியிருக்கிறார்.


அதுமட்டுமல்லாமல் அன்றைய நாட்களில் பொதுவாக வாழ்த்துப் பாடல்கள் என்பது கடவுளை வாழ்த்து துதித்தான் பெரும்பாலும் இடம்பெறும் அல்லது அந்த நூலை எழுத உதவி புரிந்த அரசருக்கான பாராட்டடு மழையாக தான் அந்த துதிப்பாடல் இருக்கும்.


ஆனால் இளங்கோ அடிகளோ "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" என்று மழையை புகழ்ந்து ஒரு பாடல் பாடினார் அதுவும் வாழ்த்துப் பாடலாக!! மழையை மட்டும் போற்றாமல் ஞாயிறு போற்றுதும் , திங்களைப் போற்றுதும் என்று இயற்கை சார்ந்த எல்லாவற்றையும் பாடி மக்களோடு மக்களாக... மக்கள் எளிதாக தொடர்பு படுத்திக் கொள்ள கூடிய நூலைப் படைத்து விட்டார்.


அதனால்தான் அவர் இன்றளவும் மிகுந்த புகழோடு இருக்கிறார்.




இன்றைக்கு மேலாண்மை நிபுணர்கள் கூறும் இந்த விஷயத்தை , அதாவது “எந்த ஒரு விளம்பரம் ஆனாலும், செய்தி ஆனாலும் அது மக்களை அடையும் போது அதை அவர்கள் , அவர்களுடனே தொடர்புபடுத்தி பார்ப்பதாக இருக்கவேண்டும் “ என்று கூறுகிறார்கள். இதை அவர் என்றோ செய்துவிட்டார் !!




சா.ரா


14 views0 comments
bottom of page