top of page

வாழ்க்கைத் துணை || Life Partner


ஆதி: நிலா இல்லாமல் கவிதை இல்லை... நீ இல்லாமல் என் வாழ்வு இல்லை...


கவி: ஹே ஆதி ஒரு அசைன்மென்ட் கொடுத்ததற்கு இப்படியா டயலாக் அடிப்ப; பாக்குறவங்க நம்ம லவ்வர்ஸ் நினைச்சுக்க போறாங்க போய் வேலையை பாரு.


ஆதி: எங்கெங்கோ பிறந்து, எந்த அறிமுகமும் இல்லாமல் தோழர்களாய் பழகி, தோழர்களாய் இறக்க இந்த உலகம்தான் தடையா!!!


கவி: இப்படி தமிழிலேயே புலமையை வளர்த்துக் கொண்டே போனனா இங்கிலீஷ் எப்ப வரும்? இங்கிலீஷ் வந்தா தான் வேலை அதுக்கு அப்புறம் கல்யாணம் இல்லன்னா இந்த தோழி மட்டும்தான்.


ஆதி: நான் கேட்ட கேள்விக்கு இது பதில் அல்லவே.


கவி: நாம் தோழர்களாக வாழ நாம் உலகமெனும் கருதும் நம் உற்றமும் சுற்றமும் போதும். நம் மனதில் கலக்கம் இல்லாதவரை உலகத்தின் பேச்சு நம்மை பாதிக்காது.


ஆதி: என் கவித்திறனுக்கு காரணமாக இருப்பது இந்தக் காட்சிதான். வானம் என்னும் முகத்திற்கு பொட்டாக அமைகிறது இந்த சந்திர பிம்பம் தான்.




கவி: புலவரே இன்று இது போதும் மாலை என்னைப் பெண் பார்க்க வருகிறார்கள் வந்துசேரும்.


அதனை ரசித்துக் கொண்டே இருவரும் அவரவர் வீட்டினை அடைந்தனர்.


படத்திற்காக வசனம் எழுதிக் கொண்டிருக்கும் குறும்பட இயக்குனர் கௌதம் ரஜினி ராதாவை வைத்து அக்காட்சியை மனக்கண்ணில் ரசிக்க 'கௌதம்' என்ற கூக்குரல் அவனை நினைவுக்கு கொண்டு வந்தது. "இன்று பௌர்ணமி கடற்கரை செல்லலாமா?" என்றாள் அவனின் மனைவி நித்யா. "சாயங்காலம் ஆறு மணிக்கு போலாம் ரெடியா இரு இந்த கதையை எழுதி முடிச்சுட்டு வந்துடுறேன். இப்ப பசிக்குது சாப்பிடலாமா!" என்று கௌதம் கேட்க தலையசைத்தவளாய் நித்யா உணவு மேஜையை தயார் செய்தாள். மௌனத்தில் உணவை உண்ட இருவரும் அவரவர் பணிகளுக்கும் மீண்டும் திரும்பினர்.


கவியை பெண்பார்க்க ஆனந்த் என்பவர் வர; இருவரின் வீட்டார் இருவரையும் தனித்துப் பேச அனுமதித்தனர். அவர்கள் இருவரும் முதலில் பேசிய விஷயம் அவர்களின் நட்பை பற்றி கவி தன் தோழன் ஆதியை பற்றி கூற ஆனந்த் தன் தோழி மோனியை பற்றி கூறினான். இருவருக்கும் இனம் புரியாத மகிழ்ச்சி அந்த மாதமே நிச்சயதார்த்தம் அடுத்த மூன்றாம் மாதம் கல்யாணம் என வாழ்க்கை இனிமையாக அமைந்தது.


குறும்படத்திற்கு "தி என்ட்" போட்ட நேரமும் கடிகாரத்தில் 6 மணி அடித்ததும் ஒன்றாக இருந்தது. பத்து நிமிடத்தில் ரெடியாகி வந்தவன் நித்தியா ரெடியாகி காத்திருந்ததை பார்த்தான். கௌதம் கண்களாலேயே மன்னிப்பு கேட்க இருவரும் கைகோர்த்து புறப்பட்டனர்.



அடுத்த அரை மணி நேரத்தில் பேசிக்கொண்டே ஒய்யாரமாய் நடந்து கொண்டு கடற்கரையை அடைந்தனர். ஈரத்துடன் வீசும் காற்றும், நிலவின் ஒளியும், ஆளே இல்லாமல் வெறிச்சோடி இருக்கும் மணல் திடலும் தனிமையிலே இனிமை காண அருமையான தருணமாக அமைந்திருந்தது.


"பொண்ணுக்கும் பொண்ணுக்கும் அடிதடிதான்

மண்ணுக்குப் போகிற உலகத்திலே

பசிக்குது பசிக்குது தினம்தினம்தான்

தின்னா பசியது தீர்ந்திடுதா

அடி ஆத்தாடி நான் பாட்டாளி உன் கூட்டாளி ஹோய்

நிலா அது வானத்து மேலே பல்லானது ஓடத்து மேலே"


கௌதம் பாடலை பாடிய பின் அமைதியில் கடலோசையை இரசித்து தூரத்தில் வந்த படகில் பயணிப்பது போல் கௌதம் வார்த்தைகளால் கூறனான்.இயக்குனரின் வார்த்தைகளில் இருவரும் கதாபாத்திரத்தோடு ஒன்றி அதனை கற்பனித்தனர்.


"வாழ்க்கை பயணத்தில் அனைவருக்கும் ஒரு துணையை தேவைப்படுகிறது. சில பேர் நம்மள மாதிரி தானே தேர்ந்தெடுக்கிறார்கள் சிலபேருக்கு அவங்களோட பெற்றோர்கள் பார்த்து வைக்கிறார்கள். வெவ்வேறு வழிகளாயின் வாழ்க்கையை எப்படி வாழறாங்கிறதுல தான் இருக்கு....." என்ற நித்யாவின் சொல்லிற்கு "இயக்குனர் நான்தான். நான்தான் கருத்து சொல்லனும் நீ எப்படி சொல்லலாம்!" என்று நகைச்சுவையுடன் அவர்களின் காதல் நாட்களுக்கு நினைவால் சென்றனர்.

37 views2 comments
bottom of page