top of page

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் நினைவலைகள்! A small recollection of "Kalki Krishamurthy"



கல்கி கிருஷ்ணமூர்த்தி என்னும் பெயரை இந்த தமிழ்நாடு அவ்வளவு சீக்கிரம் மறக்கவே முடியாது.






Picture Credit : R Venkat's Blog & Vani Muthukrishnan


அமரர் கல்கி என்றவுடன் அனைவருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது “பெண்ணியின் செல்வன்” தான் அந்த அந்தப் பெண்ணியின் செல்வன் மூலம் தமிழ் இலக்கியத்திற்கு ( புதினத்திற்க்கு ) ஒரு பெரிய அடையாளத்தை காட்டிவிட்டார். நினைத்து பாருங்கள் 1950 களில் இருந்த ஒருவர் எழுதிய நூலை இன்று 2020இல் அதை ஒரு முழுநீள படமாக எடுப்பதற்கு பலர் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறார்கள் என்றால் அவருடைய எழுத்துக்களின் வீரியத்தை தான் நாம் மெச்ச வேண்டும்.


1921 ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்து நடத்தினார் அதன் மூலம் ஈர்க்கப்பட்ட கல்கி அவர்கள் தனது பள்ளிப்படிப்பை பாதியில் விட்டுவிட்டு அகில இந்திய காங்கிரசில் இணைந்தார் .


அதன்பிறகு அவருக்கு தேசப்பற்று மிகமிக அதிகரித்து காணப்பட்டது அதன் விளைவாகத்தான் அவர் “தியாக பூமி” என்னும் ஒரு நாவலை படைத்தார். அந்த நாவல் சில வருடம் கழித்து திரைப்படமாக கூட வந்தது …! அதுவும் சாதாரணமாக வந்து விடவில்லை அன்றைய தடைகளை தாண்டி வர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. அப்படி ஒரு சமுதாய கருத்துக்களைக் கூறிய நாவல் அது.


கல்கி அவர்கள் இலக்கியத்திற்கு எந்த அளவு தொண்டாற்றினாரோ அதேபோல தமிழிசையையும் முடிந்த அளவு மீட்டுக் கொண்டுவந்து கொடுத்தார்.


சங்கீதம் என்றாலே தியாகராஜ கீர்த்தனைகள் , சமஸ்கிருத பாடல்கள் என பாடப்பட்டு வந்த நிலையில் கல்கி அவர்கள் , சதாசிவம் - எம்.எஸ்.சுப்புலட்சுமி தம்பதிகளின் துணைகொண்டு தமிழ் கீர்த்தனைகளை மீட்டெடுக்க பாடுபட்டார்.


அவருக்கு 1999 ஆம் ஆண்டு தபால் தலை வெளியிட்டு கௌரவித்தது.


அவர் பல வரலாற்று புதினங்களை படைத்துள்ளார் அதில் சிவகாமி சபதம் , பார்த்திபன் கனவு , போன்ற நூல்கள் இன்றளவும் பிரபலம்.


நாவல்கள் மட்டுமில்லாமல் கிட்டத்தட்ட ஒரு 50 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறார்.அதிலும் ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு விதம்.



அவர் 1950 களின் மத்தியில் இந்த உலகை விட்டு மறைந்தாலும் அவருடைய புகழ் அடுத்த பல தசாப்தங்களுக்கு நிலைத்து இருக்கும்.


இத்தகைய இலக்கியவாதிகள் செய்த சீரிய பணிகளால் தான் இன்றளவும் தமிழ் நூல்களை விரும்பிப் படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.


சா.ரா


10 views0 comments
bottom of page