நிலவின் தேய்தலும் வளர்தலும் || Religious Belief about Waxing and Waning of Moon
- abhimaddy2011
- Jun 2, 2020
- 2 min read
நிலவு ஏன் தேய்ந்து பின் வளர்ந்து முழுமையாக காட்சியளிக்க வேண்டும்?

"அரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு"
இந்தப் பழமொழிய எல்லோரும் கேட்டிருப்போம். அந்த மாதிரி ஹரிக்கும் ஹரனுக்கும் தொடர்ப்புள்ள ஓர் இடத்தை பத்தி பார்க்கப்போறோம்.
நிலவோட 15 நாள் வளர்பிறை 15 நாள் தேய்பிறை நிகழ்வத்திற்கு காரணமான கதை நிகழ்ந்த இடத்துல கண்ணபிரானின் வாழ்வில் மிகவும் முக்கியமான மூன்று நிகழ்வுகள் இங்கு நடந்துள்ளன.அவரின் காலில் வேடன் அம்பு பாய்த இடம். அவரின் உயிர் பிறந்த சடலம் அர்ஜூனனால் கண்டெடுக்கப்பட்ட இடம். அவரின் சடலத்தை தகனம் செய்த இடம்.
வரலாற்று கதை
பிரம்ம தேவரின் மகனாக தக்ஷ பிராஜாபதிக்கு 60 மகள்கள் அதில் 27 மகள்களை சந்திரனுக்கு திருமணம் முடித்து கொடுத்தார் தக்ஷன். அவர்களே பிற்காலத்தில் இருப்பெத்தெழு நட்சத்திரங்களாக ஆகினர்.
அந்த 27 வரையும் திருமணம் செய்த சந்திரனோ கார்த்திகை, ரோகிணி ஆகிய இருவரும் மீது மட்டும் அதீத பாசமும் அன்பும் காட்டுவதும் மற்றவர்களை கண்டுக்கொள்ளாமல் இருப்பதுமாக மாறினான்.
இது தவறான செயல் என்று சந்திரனுக்கு தட்சன் அறிவுரை கூற அவனும் அதை ஆமோதித்தான் ஆனால் பின்பற்றவில்லை. தட்ச பிரஜாபதிக்கு கோபம் தலைக்கேற சந்திரனை கண்டு 'நீ தொழுநோயால் பாதிக்கப்பட்டுவாய்' என்ன சபித்தார்.
சந்திரன் நோய்வாய்ப்பட்டால் அவனின் ஒளி குறையத் தொடங்கியது (தேயலாயிற்று). தேவ மருத்துவர்கள், அஸ்வினி குமாரர்கள், தன்வந்திரி என எந்த மருத்துவராலும் குணப்படுத்த முடியாமல் நாளுக்கு நாள் தேய்ந்துக்கொண்டே போகலாயிற்று.
சந்திரனின் அழியும் கலைகளை கண்டு பிரம்ம தேவர் "பூவுலகில் ஸரஸ்வதி நதி சங்கமத்திலுள்ள பிரபாசம் என்றும் தலத்திற்கு சென்று; பொய்கையை உருவாக்கி அதில் மற்ற நன்னீர்களை ஆவாகித்து, மணலால் லிங்கம் அமைத்து, இறப்பை நீக்கவல்ல சிவபெருமானின் மிருத்யுஞ்சய மந்திரத்தை பல கோடி முறை உச்சாடனம் செய் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்" என ஆலோசனை கொடுத்தார்.
சந்திரனின் தவப்பலனாக எம்பிரான் காட்சியளாத்து "சாபத்தால் ஏற்பட்ட நோய் முழுமையாக நீக்க முடியாது; பதினைந்து நாட்கள் தேய்ந்தும், பின் மூன்றாம் நாள் வரும் பிறையை என் முடியில் சூடிய பின் வளருவாயாக" என சாபத்திற்கு தீர்வளித்தார். அதுவே தேய்பிறை வளர்பிறையின் காரணம்.
"எம்பெருமான் சந்திரனுக்கு வரமளித்த இந்த இடத்தில் தாங்கள் லிங்கத்தில் எழுந்தருளி அனைவருக்கும் அருள்பாளிக்க வேண்டும்" என்று தேவர்களும் முனிவர்களும் வேண்டினர். கருணாமூர்த்தி அவர்களின் வேண்டுதலுக்கிணங்க அங்கு வசிக்க அது சோமநாத் (அ) சோமநாதபுரம் ஆயிற்று.
எளிய விளக்கம்

அமாவாசையில் இருந்து பௌர்ணமி வரை வளர்கின்ற நிலவு வளர்பிறையாகவும் (சுக்லபக்ஷம்) பௌர்ணமியில் இருந்து அம்மாவாசை வரை தேய்கின்ற நிலவு தேய்பிறையாகவும் (கிருஷ்ணபக்ஷம்) கருதப்படுகிறது.
'சுக்லபக்ஷம்' என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு வளர்கின்ற மற்றும் வெள்ளை என்று பொருள் தரும். வளர்கின்ற நிலவின் ஒளி பௌர்ணமியன்று வெள்ளை வெளேர் பிரகாசத்துடன் ஒளிப்பதால் சுக்லபக்ஷம் என்று அழைக்கிறோம். அதேபோல் 'கிருஷ்ணபக்ஷம்' என்னும் சமஸ்கிருத வார்த்தைக்கு தேய்கின்ற மற்றும் கருப்பு என பொருள்கள் உண்டு. தேய்கின்ற நிலவு அமாவாசை அன்று நிலவற்ற கருமேகமாக காட்சியளிக்கிறது அதுவே கிருஷ்ணபக்ஷம்.
நம் சாஸ்திர சம்பிரதாயத்தில் கூறும் ஒவ்வொரு சொல்லிற்கும் காரிய காரணம் அமைந்திருக்கிறது. நிலவின் ஒளியைப் பற்றி கண்ட நாம் ஒவ்வொரு செயலிற்கும் கேள்வி கேட்டோமாயின் அனைத்திற்கும் பதில் கிடைக்கும்...
மிக அருமையான விளக்கங்கள் , அனைவரும் புரிந்துக் கொள்ளும் அளவுக்கு தெளிவாகப் பதிந்து விட்டீர்கள் 👏👏👍💐