top of page

நுங்க பத்தின நச்சுன்னு நாலு விஷயம் || Tit-bits about the bite || Ice Apple ||




'எங்க காலத்தில் 10 காசு தெரியுமா!'


'அட போங்கப்பா! உங்க அப்பா காலத்துல ஃப்ரியாவே சாப்பிட்டுருப்பாங்க. நானே ஒரு நுங்கு 2 ரூபா, 3 பத்து ரூபானு பார்த்த காலம் போய் இப்ப ஒரு பீஸ் 5 ரூபா ஆயிடுச்சு. அதுவும் சூப்பர் மார்க்கெட் போனீங்கன்னா பேக் பண்ணது அப்படியே MRP ரேட்டில தான் வாங்கணும்; தெரு கடையில் வாங்கினா 2 கொசுறாச்சு தருவாங்க.'


எதைப் பத்தி பேசரோம்னு யோசிக்கிறீங்களா!!!


நம்ம கோடைகால தோழர் நுங்கு பத்திதாங்க...


வியக்கவைக்கும் பலன்கள்


நுங்கில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற தாது உப்புக்களும், அஸ்கார்பிக் அமிலம், கையின், வைட்டமின் பி, சி, இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து என அனைத்தும் நிறைந்த சத்தான பொருள்.




இதில் கொழுப்புச்சத்து குறைக்கும் திறன் பெற்றதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடலின் உஷ்ணம் குறையும், மலச்சிக்கல் போகும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் போன்றவை இன்னும் சில பலன்கள்.


நுங்கில் 'ஆந்த்யூசைன்' என்னும் ரசாயனம் மார்பகப் புற்றுநோய் சம்பந்தப்பட்ட கட்டிகள் உருவாகாமல் தடுக்கும். உடல் உஷ்ணத்தால் ஏற்படும் அம்மை நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.


படிக்கப் படிக்க பலன்களின் பட்டியல் பெரிதாகிக்கொண்டே போகிறது.


வகைகள்


நுங்கில் இளசு மற்றும் முத்தல் இரண்டு வகைகள் உண்டு. இளம் நுங்குகளை தோலுடன் அவ்வாறு உட்கொள்ளலாம்.




மலரும் நினைவுகள்


நுங்கு பழங்கள் ஆயுத எழுத்து (ஃ) வடிவில் இருக்கும் பனங்காயை கிராமப் புறங்களில் ஒரு குச்சியுடன் இணைத்து நடவண்டியாக பயன்படுத்தும் குழந்தைகள் பல. இன்று 'வாக்கர்' பல வண்ணங்களில் பல அலங்காரத்துடன் வந்தாலும் பனங்காய் நட வண்டியை ஓட்ட இவர்களுக்கு பாக்கியம் இல்லை. ஆனால் நாம் நினைத்தால் அந்த மகிழ்ச்சியை நம் பிள்ளைகளுக்கு தரலாம்.


அந்தப் பனங்காய் பழுத்த பிறகு நெருப்பில் சுட்டு சாப்பிட்டால் அது ஒரு தனி சுவையாக இருக்கும். இன்று பல 'டெஸர்ட்' என்னும் பேரில் வரும் இனிப்புகள் இதனுடன் போட்டியிட முடியாது.


பனங்காயில் பொத்தல் போட்டு அப்படியே கைவிட்டு நோண்டி நோண்டி சாப்பிடும் ருசியே தனி ருசி...




நீங்களும் நுங்கை வாங்கி சாப்பிட்டு கோடையின் வெப்பத்துடன் போட்டி போடுங்க...


26 views1 comment
bottom of page