top of page

பருத்தி விளைச்சலில் ஒரு கருத்தியலுண்டு கற்போமா!

பருத்தி விவசாயத்தின் முக்கிய ஒன்று. பருத்தி நாட்டின் ஒரு பணப் பயிராகும் மனித வாழ்வின் மிக முக்கியமான உடை உருவாக முக்கிய முக்கிய பங்கு செலுத்துவது பருத்தி ஆகும். பருத்தி விளைச்சலால் தேசத்தின் மக்களுக்குத் தேவையான ஆடைகள் தயாரிக்க முடியும். பருத்தி மனித வாழ்விற்கு மிகவும் அவசியமாகின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளைத் தாண்டி பருத்தி விளைச்சல் இந்திய மண்ணில் நடந்து வருகின்றது.


உலக நாடுகளில் ஆசியா ஐரோப்பா. ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் பருத்தி விளைச்சல் நடைமுறையில் உள்ளது. இந்தியாவில் உணவுப் பயிர்களுக்கு அடுத்தது பருத்தி ஒரு முக்கியமான விவசாய பயிராக இருக்கின்றது. பருத்தி விளைச்சல் இந்திய தேசத்தின் காலநிலை மாற்றத்திற்கு ஏற்றார்போல் விதைக்க முடியும். இருக்கட்டும் அதுக்கென்ன இப்போ என்று கேட்பது எனக்குக் கேட்கின்றது.


Image Credit: Praveen Ram


நாம் உடுத்தும் ஆடையில் பருத்திதான் அடிப்படையாகும். இதன் மென்மையை உருவாக்க லட்சக்கணக்கான விவசாயிகள் மேனி கருத்து சுருங்கும் இதன் அருமை தெரிந்துகொள்ள நமக்கோ வலிக்கும். பருத்தி நூல் கொண்டுதான் பல நூல்களின் உருவாக்கம் உருவானது. வண்ணங்கள் பல வாரி நமது உடையில் தெளித்து வாழும் நமக்கோ அதன் அடிப்படை சாராம்சம் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள அவசியம் இல்லை. அதானே நாம், எதற்க்கெடுத்தாலும் மீம்ஸ் போட்டு மிடுக்கு காட்டும் நம்மை ஒரு நாள் பருத்தி தோட்டத்தில் பாதுகாக்கப் போட்டால் அப்புறம் தெரியும் ஐயோ சாமி ஆளை விடுங்க என்று அலறுவோம்.


உலகத்தில் விளையும் பருத்திக்கும் இந்தியப் பருத்திக்கும் ஒரு சிறப்புண்டு அதாவது பல டெக்னாலஜி கண்டுபிடிப்புகளை கொண்டு நோகாமல் பயிரிடுவது மேற்கத்தியப் பாணி, வேர்வை சிந்த, மாடு பூட்டி, பாத்திக்கட்டி அதில் பல் சொட்டு ரத்தத்தை வியர்வையாக கொட்டி, அதனிடையே அதிகமாக விளையும் களை எடுத்து, களத்து மேட்டில் சாய்ந்து ஓய்வெடுத்து வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சி நித்தம் குளிர நமக்காக பாடுபடும் விவசாயியின் வியர்வையில் பூத்த பூதான் இன்று நாம் மினுக்கி அணியும் ஆடைகள் அதன் பாரம்பரியம் அறிவோம் வாங்க.


Image credit: Praveen Ram


மேலும் படிக்க:

36 views1 comment
bottom of page